பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், பீகார் காவல் துறை காவலர் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார். இவரை ரவி குமார் என்பவர் கடந்த 15 முதல் 20 நாட்களாகத் தொடர்ந்து பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண் ரவி குமாரின் விருப்பத்தை நிராகரித்ததால், அவர் மீது ரவி குமார் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த ரவி குமார், அவரைத் தாக்கியதுடன் கத்தியால் தலையில் குத்தியுள்ளார். காயமடைந்த நிலையிலும் அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே தப்பி ஓடி கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாகத் திரண்டு வந்ததால், அச்சமடைந்த ரவி குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தாக்குதல், பாலியல் வன்கொடுமை முயற்சி மற்றும் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ரவி குமார் மீது சுமத்தியுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு (FIR) செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…