விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில், பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து வெளியான மனதை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கராச்சியில் வசித்து வரும் அமர் பிரகாஷ் என்ற மராத்தியர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அங்குள்ள மராத்தி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் ‘கணேஷ் மாத்’ என்ற கோவிலில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காகக் வெள்ளை நிற விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலைக்கு முஸ்லிம் கலைஞர் ஒருவர் மிகவும் நேர்த்தியாகவும் கவனமாகவும் வண்ணங்களைப் பூசி, தங்கம் மற்றும் வெள்ளி நிறங்களால் அலங்கரிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
https://www.instagram.com/reel/DcxkfJ4ob2l/?utm_source=ig_web_copy_link&igsi=NTc4MTIwNjQ2YQ==
“யார் இந்து? யார் முஸ்லிம்? இது பாப்பாவின் சக்தியும் கராச்சியின் அழகும் ஆகும்” என்ற வரிகளுடன் வெளியான இந்த வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. மதங்களைக் கடந்து மனிதநேயத்தையும் கலைநயத்தையும் பறைசாற்றும் இந்தச் சம்பவத்திற்கு உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் தங்களது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
