“பார்சல் டெலிவரி செய்துவிட்டு ‘I Love You’ மெசேஜ்… மிரண்டு போன பெண்…! ரேபிடோ ஊழியரின் திமிரான பேச்சு…. லிங்க்ட்இன் பக்கத்தில் பகீர் ஆதாரங்களை வெளியிட்ட பெண்…!!

By Devi Ramu on புரட்டாதி 10, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் நோய்டாவைச் சேர்ந்த கீதிகா ஸ்ரீவாஸ்தவா என்ற பெண், ரேபிடோ செயலி மூலம் பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். பார்சல் டெலிவரி செய்து முடித்த பிறகு, அந்த ரேபிடோ ஊழியர் கீதிகாவின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு “நலமாக இருக்கிறீர்களா?” மற்றும் “I Love You” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், “மீண்டும் அழைத்தால் அல்லது குறுஞ்செய்தி அனுப்பினால் போலிசில் புகார் அளிப்பேன்” எனக் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், அதற்குக் சிறிதும் அஞ்சாத அந்த ஊழியர், “போய் புகார் அளித்துக் கொள்ளுங்கள், ரேபிடோ நிறுவனத்திலும் புகார் செய்யுங்கள்” எனத் திமிராகப் பதிலளித்துள்ளார்.

   

இந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்களை கீதிகா தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்து, “நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. பார்சல் அனுப்பக் கூட அமைதியான சூழல் இல்லை” எனத் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டார். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து ரேபிடோ நிறுவனம் அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இருப்பினும், வெறும் மன்னிப்பு மட்டும் போதாது, அந்த ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.