60 நாள் கெடு… எல்லாத்தையும் மாற்றி காட்டுவோம்… தவெக அமைச்சர்களின் ஆட்டம் ஆரம்பம்..!!

By Soundarya on வைகாசி 22, 2026

Spread the love

தமிழ்நாட்டில் தவெக புதிய அமைச்சரவையை உருவாக்கியுள்ள நிலையில், பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாகக் கற்களை வெட்டி எடுக்கும் சட்டவிரோத கல்குவாரிகள் அனைத்தும் உடனடியாக மூடப்படும் என அமைச்சர் பிரபு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இன்னும் 60 நாட்களுக்குள் அனைத்தையும் மாற்றிக் காட்டுவோம் என்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் தங்களின் அதிரடித் திட்டம் குறித்து உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அமைச்சர்கள் தங்களின் இலக்குகளை அறிவித்துச் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், புதிய அமைச்சரவை தற்போது அறிவித்துள்ள இந்த அதிரடி வாக்குறுதிகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் சொன்னபடியே களத்தில் சாத்தியமாகுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தரப்பில் கருத்துகள் எழுந்துள்ளன.