டீ காசு செலவில் உருவான படம்… கொட்டியது ரூ.28 கோடி வசூல் மழை… ஒட்டுமொத்த திரையுலகையும் அதிரவைத்த ‘Niu Lai’ அனிமேஷன் படம்…!!

By Gayathri on ஆவணி 21, 2026

Spread the love

பொதுவாக சினிமா என்றாலே கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு தேவைப்படும் என்ற பிம்பம் உள்ளது. ஆனால், ‘நியூ லாய்’ என்ற சீன அனிமேஷன் திரைப்படம் இந்த பிம்பத்தை சுக்குநூறாக உடைத்துள்ளது. வெறும் 19,000 ரூபாய் என்ற மிகச் சாதாரண பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 28 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. போட்ட முதலீட்டுக்கும் கிடைத்த பிரம்மாண்ட லாபத்திற்கும் இடையிலான இந்த வித்தியாசம், ஒட்டுமொத்த திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் பெருமளவு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியான இப்படம், ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களையே சந்தித்தது. தரமற்ற உருவாக்கம் என சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டதோடு, 2026-ஆம் ஆண்டின் மிக மோசமான திரைப்படம் என்றும் பரவலாக முத்திரை குத்தப்பட்டது. இருப்பினும், தன் மீது வைக்கப்பட்ட அத்தனை எதிர்மறை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கி, கற்பனைக்கெட்டாத வசூல் மழையால் தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இணையப் பேச்சுகளை விட, மக்களின் திரையரங்க வருகையே ஒரு படத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் என்பதற்கு ‘நியூ லாய்’ ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.