ஐயோ இப்படியா நடக்கணும்…? ஹைராலிக் கதவில் சிக்கிய 7 வயது சிறுவன்…. மறைக்கப்பட்ட உண்மை என்ன…? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 21, 2026

Spread the love

குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில், பட்டறை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் ஹைட்ராலிக் கதவில் சிக்கி திவ்யேஷ் ரத்வா என்ற 7 வயது சிறுவன் கொடூரமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள கடைக்குச் பொருட்கள் வாங்கச் சென்ற சிறுவன், பேருந்திற்குள் நுழைய முயன்றபோது எதிர்பாராதவிதமாகக் கதவின் நடுவே மாட்டிக்கொண்டதாகத் தெரிகிறது.

https://twitter.com/Anxiousvids/status/2090460850653966414

   

கதவின் அழுத்தம் தாங்காமல் சுயநினைவை இழந்து தவித்த சிறுவனை, அப்பகுதியில் இருந்த இரண்டு நபர்கள் மீட்டு வதோதராவில் உள்ள எஸ்.எஸ்.ஜி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக உடனடியாகக் கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளைக் கைப்பற்றி, ஹைட்ராலிக் கதவு எவ்வாறு மூடப்பட்டது என்பது குறித்தும், சிறுவனின் மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.