ஐயோ… என்னை எப்படியாவது காப்பாத்துங்க சார்… நேபாள நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த இளைஞரின் தவிப்பு… பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on ஆவணி 30, 2026

Spread the love

நேபாளம்-திபெத் எல்லையில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கரமான நிலநசரிவு மற்றும் பனிப்பாறைச் சரிவு காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,000 பேர் வரை மாயமாகியுள்ளனர். இந்தச் சவாலான சூழலில் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த கியிரோங் துறைமுகப் பகுதியைச் சீனா தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட முதல் தொழில்முறை மீட்புக் குழு சென்றடைந்துள்ளது. அங்கு சேற்றில் முழுமையாகப் புதைந்திருந்த ஒரு இளைஞரை மீட்கும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

   

https://twitter.com/RT_com/status/2093346189290754453/video/1

   

இரண்டு நாட்களாக நீடிக்கும் இந்த அவல நிலையில், விபத்தில் சிக்கிய அந்த இளைஞர் அதிர்ச்சியால் நடுங்கும் காட்சிகள் காண்போரை உலுக்கும் வகையில் உள்ளன. துயரம் நிறைந்த இந்தச் சூழலில் மனிதநேய மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.