அம்மாடியோ… “நடுராத்திரி 3 மணிக்கு ஆட்டோவா?”… காசு வாங்காம எங்க கூட்டிட்டு… போறாங்கன்னு தெரியுமா?… பெண் ஓட்டுநரின் அசத்தல் ஸ்டோரி… பாராட்டும் நெட்டிசென்கள்…!

By Swetha on ஆவணி 8, 2026

Spread the love

வடோதராவைச் சேர்ந்த அந்த பெண் ஆட்டோ ஓட்டுநர், இரவு நேரத்தில் வாகனம் ஓட்டி தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். சுயசார்புடனும் தைரியத்துடனும் செயல்படும் இவர், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான நேரத்தில் மருத்துவ அவசர உதவிக்காக மருத்துவமனை செல்லும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக ஆட்டோ சேவையை வழங்குகிறார்.

அதிகாலை 3 மணிக்கு அவசர நிலையில் பயணிக்கும் நோயாளிகளிடம் ஒரு ரூபாய் கூடக் கட்டணமாகப் பெறாமல், அவர்களைப் பாதுகாப்பாக மருத்துவமனையில் சேர்க்கிறார். இவரின் இந்த மனிதநேயப் பணி பலரின் உயிரைக் காப்பதோடு, ஏழை எளிய குடும்பங்களுக்கு இக்கட்டான நேரத்தில் மிகப்பெரிய உதவியாகவும் அமைந்திருக்கிறது.

   

தான் மட்டும் சுயமாக முன்னேறுவதோடு நின்றுவிடாமல், சுமார் 50 பெண்களுக்காவது ஆட்டோ ஓட்டப் பயிற்சி அளித்து அவர்களை வேலைவாய்ப்புடன் இணைத்துள்ளார். இதன் மூலம் பல பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி, சமூகத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய சிறந்த முன்மாதிரியாக இவர் திகழ்கிறார்.