அட கொடுமையே… “தி ஸ்டேர்கேஸ் சீரிஸ்” பாணியில் படுகொலை… மனைவியைக் கொன்று ரூ12 லட்சத்துடன்… தப்ப முயன்ற கணவர்… போலீசிடம் சிக்கியது எப்படி?…

By Swetha on ஆவணி 8, 2026

Spread the love

டெல்லியில் 62 வயதான கமல் சிங் என்பவர், தனது மனைவி கோமலின் கழுத்தை அறுத்தும், கத்திரிக்கோலால் பலமுறை குத்தியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். ஜூன் 30-ஆம் தேதி தம்பதியின் மகனும் மகளும் வெளியே சென்றிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கொலையைச் செய்த பிறகு, குளித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு தனது ஸ்கூட்டரில் தப்பியோடிய கமல் சிங், செல்லும் வழியில் தனது வங்கிச் கணக்குகளிலிருந்து மேலும் 7 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.

காவல்துறையின் விசாரணையைத் திசைதிருப்ப கமல் சிங் பல திட்டங்களைத் தீட்டினார். நேபாளத்திற்குத் தப்பிச் செல்வது போலக் காட்டுவதற்காக கோரக்பூர் செல்லும் வழியில் தனது செல்போனை ஆன் செய்து வைத்துப் போலித் தடயத்தை உருவாக்கினார். அதன் பிறகு போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு மதுராவுக்குச் சென்றார். இருப்பினும், டெல்லி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, மூன்று நாட்களுக்குப் பிறகு மதுரா ரயில் நிலையத்தில் வைத்து அவரை ஸ்கூட்டர் மற்றும் பணத்துடன் கைது செய்தனர்.

   

விசாரணையில், ‘தி ஸ்டேர்கேஸ்’ என்ற வெப் தொடரைப் பார்த்து, கொலைக்கான ஆயுதத்தை எப்படி மறைப்பது மற்றும் போலீசிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்பதற்கான யோசனைகளைப் பெற்றதாகக் கமல் சிங் ஒப்புக்கொண்டார். குடும்பத்தில் நிலவிவந்த சொத்து தகராறு மற்றும் வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு இருந்த தவறான தொடர்பே இந்த கொடூரக் கொலைக்கு முக்கியக் காரணம் எனப் போலீசார் கண்டறிந்துள்ளனர்.