தேசிய அரசியலில் என்ட்ரி கொடுக்க பிளான் போட்ட CM விஜய்! கலக்கத்தில் காங்கிரஸ் மேலிடம்?…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

By Nanthini on புரட்டாதி 30, 2026

Spread the love

தேசிய அளவில் தமிழக வெற்றிக் கழகத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் அக்கட்சியின் தலைமை சற்று தயக்கம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் விளங்கும் மாநிலங்களில் புதிய கிளைகளைத் தொடங்குவது, வருங்காலக் கூட்டணி உறவுகளில் மனக்கசப்பையும் நெருடலையும் ஏற்படுத்தக்கூடும் என்பதே இந்த எச்சரிக்கை நடைமுறைக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இதனாலேயே அண்மையில் கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்ட தவெக கிளைகள் அதிகாரப்பூர்வமற்றவை என்று கட்சித் தலைமை பகிரங்கமாக அறிவிக்கும் சூழல் உருவானது. இருப்பினும், தவெகவை அகில இந்திய அளவிலான ஒரு பெரிய கட்சியாக மாற்றியமைக்கும் தொலைநோக்குத் திட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம் தொடர்ந்து இருந்துவருவதாகவும், அதற்கான பொருத்தமான காலத்தருணத்தை அவர் எதிர்பார்த்திருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.