திக் திக் நிமிடங்கள்…!! ரயிலின் அடியில் சிக்கி கொண்ட பெண்… 5 நிமிடத்தில் காப்பாற்றி மரணத்தின் பிடியில் இருந்து மீட்ட வீரர்கள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 30, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் சந்திப்பின் பிளாட்பாரம் எண் 1-ல், நகர்ந்து கொண்டிருந்த பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் பயணி ஒருவர், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுந்து ரயிலின் அடியில் சிக்கிக்கொண்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மகேஷ் குமார் ஹரித்வால், காவலர்கள் பிரவேஷ் குமார் மற்றும் பசந்த் ஆகியோர் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். உடனடியாக ரயிலின் அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய வீரர்கள், சுமார் 5 நிமிடங்கள் போராடி ரயிலின் அடியில் சிக்கியிருந்த பெண்ணை பத்திரமாக வெளியே மீட்டனர்.

   

சிசிடிவி கேமராவில் பதிவான இந்தத் திகில் மீட்புக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சாதுர்யமாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.