தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். அதன்படி அக்டோபர் 2 நாளை விஜயதசமி அன்று அரசு, அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் தொடர்பாக எமிஸ் தளத்தில் பதிவிடப்படுவதை மேற்பார்வை செய்ய CEO-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 5ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 6 பள்ளிகள் திறக்கப்படும்
