ஜன் சுராஜ் கட்சியிலிருந்து பீகார் தேர்தலின் போது பம்பரமாக சுழன்று வேலை பார்த்த நடிகர் ரிதேஷ் பாண்டே கட்சியிலிருந்து விலக்குவதாக திடீரென அறிவித்துள்ளார். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் கட்சி சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் தேர்தலில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது. ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்த பீகார் தேர்தல் முடிவுகளில் பிரசாந்த் கிஷோரின் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இதனால் பலரும் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பதால் பிரஷாந்த் கிஷோர் அதிருப்தி அடைந்துள்ளார். ரித்தேஷ் பாண்டே விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது
