பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலைப் பருகியதாகப் பேசிய பழைய நேர்காணல் ஒன்று தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நேர்காணல் ஒன்றில் பேசிய ஆயுஷ்மான் குரானா, உடற்பயிற்சிக்குப் பிறகு உடலுக்குத் தேவையான புரதச் சத்திற்காக (Protein), தனது மனைவியின் தாய்ப்பாலைப் பருகியதாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது மனைவி தாஹிரா காஷ்யப் எழுதிய “The 7 Sins of Being a Mother” என்ற புத்தகத்தில் இச்சம்பவம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
தான் தனது குழந்தைக்காகச் சேமித்து வைத்திருந்த தாய்ப்பாலை, தனது கணவர் குரானா “திருடிப்” பருகிவிட்டதாக அதில் அவர் நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம், தற்போது மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
