ஈரோடு பேருந்து நிலையம் அருகே இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் (26) என்ற இளைஞர், இருட்டில் வேகத்தடை சரியாக தெரியாததால் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
மணிகண்டனின் உடலைக் கைப்பற்றிய காவல்துறை, உடற்கூறாய்வுக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது. இறுதிச்சடங்குகள் முடிந்து அவரது உடலை மயானத்தில் தகனம் செய்த கையோடு, மணிகண்டனின் நண்பர்கள் துயரத்தை மட்டும் சுமந்து கொண்டு வீட்டிற்குச் செல்லவில்லை; உடனடி நடவடிக்கையில் இறங்கினர்.
மேலும் யாருக்கும் இதுபோன்ற சோகமான விபத்து நேரிடக் கூடாது என்பதற்காக, மணிகண்டனின் நண்பர்கள் அந்த வேகத்தடைக்குத் தாங்களே சென்று வெள்ளைக் கோடுகளைப் பூசினர். நண்பனை இழந்த வேதனையிலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் செய்த இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டையும் நெகிழ்ச்சியையும் பெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவர், தனது தோழியான தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகியுடன்…
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை அம்மன் கோயில் தெரு, சிவாஜி நகர் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாகக்…
தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் வேளையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக எழுந்த தொடர் புகார்களின்…
நீலகிரி மற்றும் கோவையைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர்…
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,…
கன்னட்ஸ்கோய் கூடைப்பந்து அல்லது கிளிஃப் டைவிங் வீராங்கனையான மோலி கார்ல்சன் , வட அட்லாண்டிக் கடலில் உள்ள நியூஃபவுண்ட்லாந்து பகுதியில்…