பிரியங்கா சோப்ராவிற்கு நேர்ந்த அந்த ஒரு நிமிடம்… ரெட் கார்பெட்டில் சிரிப்பு, பின்னாடியே ஒரு ஆபத்து… பதறவைக்கும் வைரல் வீடியோ….!!!

Spread the love

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 98-வது ஆஸ்கர் விருது விழாவில், உலகப்புகழ் பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு ஒரு கோல்ஃப் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர்கள் எதிர்பாராத ஒரு விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பினர். வண்டியை ஓட்டி வந்த பெண் ஓட்டுநர் ஒரு திருப்பத்தில் வேகமாகத் திருப்பியபோது, வண்டி ஒரு பக்கமாகச் சாய்ந்து கவிழும் நிலைக்குச் சென்றது.

மேலும் பிரியங்கா அமர்ந்திருந்த இடது புறம் வண்டி அதிகமாகச் சரிந்ததால், ஒரு நிமிடம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உடனடியாக வண்டியைச் சமநிலைப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த பதற்றமான தருணம் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


“>

இதனால் விபத்திலிருந்து தப்பிய பின், பிரியங்கா சோப்ரா விழாவில் ஒரு தொகுப்பாளராக பங்கேற்று சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை அறிவித்தார். இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டியில் இந்தியத் திரைப்படங்கள் இறுதிப் பரிந்துரை வரை செல்லத் தவறிய நிலையில், பிரியங்கா சோப்ராவின் வருகை இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இருந்தபோதிலும், இந்த கோல்ஃப் வண்டிச் சம்பவம் அவரது ரசிகர்களிடையே ஒரு சிறிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajeshwari

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago