மரண பயம் காட்டிய ₹10 மேங்கோ ஜூஸ்… குடித்த உடனே துடித்த 2 வயது குழந்தை… அதிரவைக்கும் பின்னணி…!

By Swetha on ஆனி 16, 2026

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் உள்ள கரேலி படி என்ற கிராமத்தில், 10 ரூபாய் மதிப்புள்ள பாக்கெட் மேங்கோ ஜூஸ் குடித்த இரண்டு வயது சிறுமி ஒருத்தி திடீரென கடுமையான உடல்நலக் குறைபாட்டிற்கு ஆளானாள். அந்த ஜூஸைக் குடித்த உடனே அச்சிறுமிக்கு கடுமையான நெஞ்சுப் படபடப்பும், வயிற்று உபாதைகளும் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவளை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது சிகிச்சைக்குப் பிறகு சிறுமியின் உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். சிறுமி குடித்த மேங்கோ ஜூஸ் பாக்கெட்டை அவர்கள் ஆய்வு செய்தபோது, அதற்குள் விசித்திரமான கழிவுகள் மற்றும் பூஞ்சை காளான் வளர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. ஜூஸ் பாக்கெட்டை சரியான வெப்பநிலையில் பராமரிக்காத காரணத்தால், அதற்குள் குளோரைடு பாதிப்பு ஏற்பட்டு இந்த பூஞ்சை உருவாகியிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் முதற்கட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

பாக்கெட் பானங்களின் தரம் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அதே பேட்ச் நம்பர் கொண்ட மேங்கோ ஜூஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட அனைத்து கடைகளையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், அந்த குறிப்பிட்ட தயாரிப்புகளை உடனடியாக விற்பனை செய்யக் கூடாது எனத் தடை விதித்து, அவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, கிராமப்புறங்களில் விற்கப்படும் பாக்கெட் உணவுகளின் தரம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.