“வீடு தேடி வரும் ரேஷன்” தமிழகம் முழுவதும் இன்று தாயுமானவர் திட்டம் தொடக்கம்.. மக்களே ரெடியா..?

By Soundarya on ஆவணி 12, 2025

Spread the love

தமிழ்நாட்டில் வயதான மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேஷன் பொருட்களை தரும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்”  12ஆம் தேதியான இன்று முதல் தொடங்கப்படுகிறது . சோதனை அடிப்படையில் 10 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்த இந்த திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலாகிறது.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். பிரதி மாதம் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு அன்று 16 , 73, 333 குடும்ப அட்டைகளுக்கு நேரடியாக பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் 15.81 லட்சம், மாற்றுத்திறனாளிகள் 20.41 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.