பருக்களை நீக்கி உங்க முகத்தை பளிச்சென்று ஆக்க… மூலிகை சோப் வீட்டிலேயே செய்யலாம்… இதோ ரொம்ப ஈஸி..!!

By Soundarya on ஆவணி 12, 2025

Spread the love

பொதுவாக   பெண்கள் தங்களுடைய முகத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். ஆனால் சூரிய கதிர்கள் படும் காரணத்தால் முகத்தில் சுருக்கம், பருக்கள் போன்றவை தோன்றி முகத்தின் அழகே கெடுத்துவிடும். அந்த வகையில் சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும் வேப்பிலை சோப்பு தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

   

சோப்பு கட்டி – ஒரு துண்டு

   

வேப்பிலை – இரண்டு கைப்பிடி

 

தேங்காய் எண்ணெய் -இரண்டு ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு மிக்ஸியில் சுத்தம் செய்து வைத்துள்ளது வேப்பிலையை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து சோப்பு கட்டியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொதிக்கின்ற தண்ணீர் மீது வைத்து கரைக்கவும். சோப்பு கரைந்து வந்தவுடன் அதில் வேப்பிலை கலவை சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக சோப்பு  அச்சில் ஊற்றி 15 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும் அல்லது இரண்டு மணி நேரம் வெளியில் வைத்தால் வேப்பிலை சோப்பு தயாராகி விடும்.