எனக்கே கெட்ட பெயர் வாங்கி தர பாக்குறியா?.. பாக்யராஜை பழிக்கு பழி வாங்கிய சிவாஜி.. படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம்..!

By Nanthini on ஐப்பசி 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருந்தவர் தான் நடிகர் சிவாஜி. 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் எந்த கேரக்டராக இருந்தாலும் அதற்காக தன்னையே மாற்றிக் கொள்ளும் நடிகராக அறியப்பட்ட சிவாஜியின் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ஹீரோவாக நடித்து வந்த சிவாஜி ஒரு கட்டத்தில் மற்ற நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார். அதன்படி உருவான திரைப்படம் தான் தாவணி கனவுகள்.

   

1982 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் முன்னாள் ராணுவ அதிகாரி சைக்கிள் கடை நடத்தும் கேப்டன் என்ற கேரக்டரில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகனாக நடித்த பாக்கியராஜ் படத்தை இயக்கி தயாரித்திருந்தார். பொதுவாக தன்னுடைய படங்களில் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு முன்னதாகவே வந்து விடும் சிவாஜி இந்த படத்தின் படப்பிடிப்பிலும் இயக்குனர் பாக்கியராஜ் சொன்ன நேரத்திற்கு வந்துள்ளார். அப்படி ஒரு நாள் பாக்கியராஜ் சொன்ன நேரத்தில் சிவாஜி வந்துவிட்ட நிலையில், பாக்கியராஜ் அவருக்கு முதல் ஷாட் வைக்காமல் மற்ற நடிகர்களின் ஷாட்களை எடுக்க புறப்பட்டு உள்ளார்.

   

 

அப்போது அவரை அழைத்த சிவாஜி என்னை எத்தனை மணிக்கு வரச் சொன்ன என்று கேட்க, ஏழு மணிக்கு என்று பாக்கியராஜ் கூறியுள்ளார். என்னை வர சொல்லிட்டா எனக்கு தான் ஃபர்ஸ்ட் ஷார்ட் வைக்க வேண்டும், ஆனால் நீ வேற ஒருத்தருக்கு ஷாட் வைக்கப் போற, இப்போ சுத்தி இருக்கவங்க என்ன நினைப்பாங்க நான் தாமதமா வந்துவிட்டேன் என்று தானே நினைப்பார்கள், எனக்கு கெட்ட பையன் வாங்கி கொடுக்க வேண்டும் என்று இப்படி பண்றியா, நீ என்னை வரச் சொன்னால் என்னை வைத்து தானே எடுக்க வேண்டும் என்று சிவாஜி கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று சிவாஜி கேட்க, 7.30 மணிக்கு வாங்க என்று பாக்கியராஜ் கூறியதும் அடுத்த நாள் 7.20 மணிக்கு சிவாஜி படப்பிடிப்பிற்கு வந்துவிட்டார். சிவாஜி முன்பே வந்துவிட்டார் என்று தெரிந்த பாக்கியராஜ் அவசரமாக வந்துள்ளார். வந்த உடனே அண்ணே வணக்கம் என்ன 7.20 மணிக்கே வந்துட்டீங்க என்று பாக்கியராஜ் கேட்டுள்ளார். உன்னை நான் பழி தீர்த்துக் கொண்டேன் என்று சிவாஜி எப்போது கூறியுள்ளார். நேற்று 2000 பேர் இருந்தப்போ நான் லேட்டா வந்தது போன்று இருந்தது. அதனால் இன்னைக்கு முன்பே வந்து அண்ணனே முன்னாடி வந்து உட்கார்ந்து இருக்காரு. இந்த பாக்கியராஜை இன்னும் காணோமே என்று யோசிப்பார்கள் என சிவாஜி கூறியுள்ளார். இப்படி பாக்கியராஜ் சிவாஜி பழிக்கு பழி தீர்த்துள்ளார்.