கரகாட்டக்காரன் கனகா ஏன் இப்படி ஆனார்?.. உண்மையிலேயே அவருடைய வாழ்க்கையில் நடந்தது என்ன.. யாருமே அறியாத மறுபக்கம்..!

By Nanthini on ஐப்பசி 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருந்தவர் தான் கனகா. தமிழில் கரகாட்டக்காரன் திரைப்படம் மூலம் அறிமுகமாகி முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து எண்பதுகளில் கனவு கனியாக வலம் வந்தவர். இதனைத் தொடர்ந்து சக்திவேல் மற்றும் பெரிய குடும்பம் என எண்பதுகளில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த கனகா 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்தார். இறுதியாக 1999 ஆம் ஆண்டு விரலுக்கேத்த வீக்கம் என்ற திரைப்படத்தில் விவேக்குக்கு ஜோடியாக நடித்த கனகா அதன்பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போனார். சமீபத்தில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

   

ஏனென்றால் அந்த புகைப்படத்தில் கனகா குண்டாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்தார். இப்படி இருக்கும் இவருக்கு என்ன ஆனது ஏன் இவர் சினிமாவில் இருந்து காணாமல் போனார் என்று ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான சூழலில் கனகா குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை தேவிகாவின் மகள் தான் கனகா. ஆனால் காலப்போக்கில் கனகாவின் அம்மா தேவிகா என்று எல்லோரும் பேசும் அளவுக்கு கனகா வளர்ந்து நின்றார். நடிகை தேவிகா கணவரை பிரிந்து மகள் கனகாவுடன் தனியாக வாழ்ந்து வந்தார். ஷூட்டிங்கில் தொடங்கி எங்கு சென்றாலும் கனகாவின் நிழலாகவே அவர் இருந்து வந்தார். ஆனால் கடந்த 2002 ஆம் ஆண்டு கனகாவின் தாயார் திடீரென்று மரணம் அடைந்தார்.

   

 

அம்மாவின் மீது அதீத அன்பு கொண்டு அவர் மீது உயிரையே வைத்திருந்த கனகாவால் அவருடைய இழப்பை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சொந்த பந்தம் என யாரும் இல்லாமல் எப்போதும் அம்மா உடனே வாழ்ந்து வந்த கனகாவுக்கு அவர் இல்லாத வாழ்க்கையை எதிர்கொள்ள முடியவில்லை. தனிமை மேலும் தொந்தரவு செய்ய ஒரு கட்டத்தில் அம்மாவின் ஆவியுடன் பேசுகிறேன் என்று பேட்டி கொடுத்து சர்ச்சையை கிளப்பி இருந்தார். அம்மா இறந்த பிறகு கனகாவை தேடி வந்த அவருடைய தந்தையை கனகா ஏற்றுக் கொள்ளவில்லை. சொத்துக்காக மீண்டும் தன்னுடன் சேர முயற்சிப்பதாக கூறினார்.

அது மட்டுமல்லாமல் இடையில் புற்றுநோயால் கனகா இறந்து விட்டதாக செய்தி வெளிவந்த சூழலில் சொத்தை அபகரிக்க தன்னுடைய தந்தை கிளப்பிய வதந்தி என்று அவர் மீது கனகா புகார் அளித்திருந்தார். பிறகு ஒருவரை கனகா திருமணம் செய்து கொண்ட நிலையில் 15 நாளில் அவர் மாயமாகி விட்டதாக செய்தி வெளியானது. இப்படி ஒரு சூழ்நிலையில் வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்த கனகா அந்த வீட்டை விட்டு வெளியே வராமல் வெளியுலகத்திற்கு தன்னை காட்டிக் கொள்ளவில்லை. இன்று வரை யாராலும் அந்த வீட்டிற்குள் உள்ளே செல்ல முடியவில்லை. கனகா நினைத்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருகிறார். இப்படி ஒரு சோகப் பின்னணியில் தான் கனகாவின் வாழ்க்கை முடங்கி போய் உள்ளது.