“விஜய் ஜெயித்த அதே இன்ஸ்டா ரீல்ஸ் ரூட்”.. தவெக-வை ஓரங்கட்ட இபிஎஸ் கையில் எடுத்த ‘அந்த’ ரகசிய அஸ்திரம்.. அதிரும் அரசியல் வட்டாரம்..!!

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், அக்கட்சியின் உட்கட்டமைப்பில் கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளது. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள சூழலில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே அதிமுகவின் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி விஜய்யின் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் சட்டமன்றத்திலேயே அதிமுக அதிகாரப்பூர்வமாக இரண்டாகப் பிளவடைந்ததோடு, எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு என இரு துருவங்களாக மாறி கடும் உட்கட்சிப் பூசலில் தவித்து வருகிறது.

இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், தங்களது எம்.எல்.ஏ பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவிலிருந்து தவெக-வுக்கு தாவும் முக்கிய நிர்வாகிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பிளவு பட்ட அதிமுக மீண்டும் இணைந்துவிட்டனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர், தவெக நமக்கு எதிரி அல்ல என்றும், என்றைக்குமே திமுகதான் நமது முதன்மை எதிரி என்றும் பேசி தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார். எந்த இன்ஸ்டா ரீல்ஸ் தளம் மூலம் தவெக வெற்றி பெற்றதோ, அதே தளம் வழியாக தற்போதைய அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், தவெகவின் வெற்றி நிலையற்றது என்பதால் அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகவே வெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைக்கப்போவதாக எழுந்த சர்ச்சைகளுக்கு, திமுகதான் எதிரி என்ற இபிஎஸ்-ஸின் தற்போதைய பேச்சு மறைமுக முற்றுப்புள்ளி வைப்பதாகப் பார்க்கப்பட்டாலும், இதுகுறித்த அரசியல் குழப்பங்களும் விவாதங்களும் இன்னும் நீடித்துக்கொண்டேதான் இருக்கின்றன. மறுபுறம், அதிமுகவின் விமர்சனங்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்து வரும் தவெகவின் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் தலைமை சரியில்லாத காரணத்தாலேயே அங்கிருந்து நிர்வாகிகள் தவெகவை நோக்கி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அதிமுகவிலிருந்து கிட்டத்தட்ட 90 சதவீதத்தினர் தவெகவில் இணைவார்கள் என்றும் அவர் அதிரடியாகப் பேசியுள்ளார். இப்படி தவெக தரப்பில் இருந்து அதிமுகவிலிருந்து இன்னும் பலர் வருவார்கள் எனத் தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், அடுத்து நாமே ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தனது நிர்வாகிகளைத் தேர்தல் களத்திற்குத் தயார்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

Muthu Mani

Recent Posts

விஜய் அலைக்கு இபிஎஸ் வைத்த 365 நாள் செக் பாயிண்ட்… அதிமுகவிலிருந்து விலகியவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய மும்முனைப் போட்டியைச் சந்தித்திருக்கிறது.…

18 seconds ago

“விஜய் அமைச்சரவையில் திடீர் திருப்பம்”…. ஜான் ஆரோக்கியசாமிக்கு புதிய பதிவு?…. கோட்டை வட்டாரத்தை அதிரவைக்கும் தவெகவின் புதிய அதிகாரப் போட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…

8 minutes ago

“3,000 பேர் இறந்தாலும் பரவாயில்லை”…. ஈரானில் அரங்கேறும் அதிரவைக்கும் ‘கல்லறை’ ரகசியம்.. உலகையே உற்றுநோக்க வைக்கும் கமேனியின் கடைசிப் பயணம்….!

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…

13 minutes ago

“அட பாவிங்களா… மது வாங்குவதில் நீயா, நானா சண்டை…? நண்பனை ஏரிச் சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்… காஞ்சியில் நடந்த பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…

16 minutes ago

‘மெனோபாஸ்’ பற்றி த்ரிஷா சொன்ன அந்த ஒரு வார்த்தை… நடிகைகள் பேச பயந்த ரகசியம்… பாராட்டும் நெட்டிசன்கள்…!

தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…

16 minutes ago

“திமுக + அதிமுக + பாஜக கூட்டணி?”…. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உடைத்த அதிர்ச்சி உண்மை… தமிழக அரசியலில் அரங்கேறும் மெகா சதி….!

திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…

16 minutes ago