ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை விமர்சிக்கும் வகையில் ஈரான் வெளியிட்டுள்ள புதிய வீடியோ தற்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஈரான் முறியடித்துவிட்டதாகவும், ட்ரம்ப் நிபந்தனைகளுக்குப் பணிந்து ‘சரண் அடைந்துவிட்டார்’ என்றும் கிண்டல் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. போர் நிறுத்தத்திற்குப் பிறகு அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கைகள் தோல்வியடைந்துவிட்டதாக ஈரான் இந்த வீடியோ மூலம் உலகுக்கு உணர்த்த முயல்கிறது.
மேலும் சமூக வலைதளங்களில் இது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஈரான் ஆதரவு குழுக்களால் பகிரப்படும் இந்த வீடியோ, ட்ரம்ப்பின் நிர்வாகத்தை எள்ளி நகையாடுவதோடு, போர் நிறுத்தத்தை தங்களின் மிகப்பெரிய வெற்றியாக ஈரான் கொண்டாடி வருகிறது. அமெரிக்க அதிபரை நேரடியாகத் தாக்கி ஈரான் இத்தகைய வீடியோவை வெளியிட்டுள்ளது, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வரும் கசப்பான உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
