கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வெயிலையும் பொருட்படுத்தாமல் தன்னை காண்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பரப்புரை வாகனத்தில் சென்றுகொண்டிருந்த விஜய், சிறுவன் காத்திருப்பதை அறிந்ததும் உடனடியாக வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கிச் சென்று அந்த சிறுவனை அன்புடன் அரவணைத்துக் கொண்டார்.
மேலும், அந்த சிறுவனின் நெற்றியில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்திய இந்த உருக்கமான தருணம், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவன் நீண்ட நேரம் காத்திருந்ததற்குப் பலனாக விஜய்யின் இந்த அன்பான செயல் அமைந்ததாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் மக்கள் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் விஜய்யின் இந்த மனிதநேயமிக்க செயல் அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான தருணமாகப் பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய்யின் இத்தகைய செயல்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
