தமிழகத்தின் புதிய முழுநேர டி.ஜி.பி.யைத் (DGP) தேர்வு செய்வதற்கான சீனியாரிட்டி பட்டியலில் ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகிய மூன்று மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்களைத் தேர்வுக்குழு இறுதி செய்து ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூன்று அதிகாரிகளில் இருந்து ஒருவரைத் தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாகத் தேர்வு செய்யும் இறுதி அதிகாரம் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு இருக்கிறது. இதனால் கோட்டை வட்டாரத்திலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியிலும் புதிய டி.ஜி.பி. யார் என்ற கேள்வி தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
இந்த பந்தயத்தில் தற்போதைய நிலவரப்படி, டி.ஜி.பி. பொறுப்பை ஏற்க ராஜீவ் குமார் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இறுதிப் போட்டி சந்தீப் ராய் ரத்தோருக்கும், மகேஷ்குமார் அகர்வாலுக்கும் இடையேதான் பலமாக நிலவி வருகிறது. இவர்களில் மகேஷ்குமார் அகர்வாலுக்கு இந்த உயரிய பதவி கிடைப்பதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தற்போதைய உளவுத்துறை ஐ.ஜி.யான அஸ்ரா கார்க், மகேஷ்குமார் அகர்வாலை அந்தப் பதவிக்குக் கொண்டு வர விரும்புவதாகவும், அது குறித்து முதலமைச்சரிடமே நேரடியாகப் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில், மற்றொரு மூத்த அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோருக்குத் தமிழக உள்துறைச் செயலாளரின் முழுமையான ஆதரவும், பரிந்துரையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு ஆதரவாகப் பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பிலும் தீவிரமான லாபி (முயற்சிகள்) நடந்து வருகிறது. இதனால், மிக முக்கியத்துவம் வாய்ந்த புதிய டி.ஜி.பி. நியமன விவகாரத்தில், முதலமைச்சரிடம் பரிந்துரை செய்த உளவுத்துறையின் கை ஓங்குமா அல்லது உள்துறைச் செயலாளரின் ஆதரவைப் பெற்ற தரப்பு ஜெயிக்குமா என்று அதிகாரிகள் மத்தியில் சுவாரசியமான விவாதங்கள் எழுந்துள்ளன.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…