விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி தற்பொழுது பரபரப்பாகவும் , விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே நுழைந்தவர் தான் அர்ச்சனா. ராஜா ராணி சீரியலில் வில்லியாக மிரட்டிய இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்கள் அழுது கொண்டே இருந்த இவர், தற்பொழுது அனைவரையும் மிரட்டி கொண்டுள்ளார்.
ஒரு சிலர் இவருக்கு ஆதரவு அளித்து வந்தாலும், மறுபுறம் விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதில் மிக முக்கியமாக இவரது புகைபிடிக்கும் பழக்கம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் அறை இருப்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இதில் ஆண்கள் அடிக்கடி செல்வதை விட பெண்கள் தான் அடிக்கடி சென்று வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக அர்ச்சனா தான் அடிக்கடி இந்த அறைக்குள் சென்று வருகிறார். இது தற்பொழுது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் ‘ட்ரிங்க்ஸ், ஸ்மோக்கிங் பழக்கம் அர்ச்சனாவிற்கு இருக்கிறது. ட்ரிங்க்ஸ் என்பது டீ, காபி குடிக்கும் பழக்கம்.
காபி கிடைக்கவில்லை என்று நான் பயங்கரமாக பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டு இருந்தேன். அதை பெருசாக பேசினால் இதுவும் பேச தான் வேண்டும். இதெல்லாம் ஒரு விதமான போதைப் பொருள்தான். அர்ச்சனா கோபப்பட்டு கத்துவதற்கும், இப்படி நடந்து கொள்வதற்கும் இதுதான் காரணம்’ என்று கூறியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…