தங்கலான் படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கிய பிரபல OTT நிறுவனம்.. அந்த தேதியில் ரிலீஸ் செய்ய பிளான்..!!

By admin on ஆவணி 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளம்பரம் விக்ரம் சேது, காசி, அந்நியன், பிதாமகன், ஐ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். விக்ரம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அந்த வகையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.

   

இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்கனவே அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். தங்கலான் திரைப்படத்தை ரஞ்சித் மாபெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளார். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்தார். கே.ஜி.எப் எனப்படும் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கலான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.

   

 

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். மேலும் பசுபதி, மாளவிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நேற்று சுதந்திர தின ஸ்பெஷலாக தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தற்போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றுள்ளது. படத்தில் விக்ரமின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது.  இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் தங்கலான் திரைப்படத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

தங்கலான் படத்தின் தமிழக உரிமை.. இத்தனை கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா

கமல்ஹாசன் நடிப்பில் ரிலீசான இந்தியன் 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. முன்னதாக விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி தங்கலான் திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

விக்ரமின் தங்கலான் படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் இதோ – News18 தமிழ்