வசூலில் 100 கோடியை தாண்டிய தனுஷின் ராயன்.. OTT தளத்தில் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு..!!

By admin on ஆவணி 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் கடந்த 2002- ஆம் ஆண்டு ரிலீசான துள்ளுவதோ இளமை படம் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், மரியான், தங்க மகன், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

   

தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இது தனுஷின் ஐம்பதாவது படம். இதுவரை ராயன் திரைப்படம் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

 

இயக்குனராகவும் இந்த படத்தில் தனுஷ் வெற்றி பெற்றார் என்று தான் கூற வேண்டும். ராயன் படத்தில் அடங்காத அசுரன் பாடலில் இடம் பெற்ற உசுரே நீதான் என்ற வரிகள் சூப்பர் ஹிட் ஆனது. இதேபோல வாட்டர் பாக்கெட் பாடலும் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து ராயன் திரைப்படம் அனைவரையும் மிரள வைத்துள்ளது.

ராயன் விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? தனுஷ் இயக்குநராக வெற்றி பெற்றாரா? - BBC News தமிழ்

இந்த நிலையில் அமேசான் பிரைம் நிறுவனம் ராயன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் ராயன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தியேட்டரில் மாஸ் காட்டிய ராயன்.. ஓடிடியில் எந்த தேதியில் ரிலீஸாகுது தெரியுமா? | Actor dhanush 50th movie raayan ott release date - Tamil Filmibeat