தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவர் தற்போது அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அதற்கு முன்பாக விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
அதே சமயம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ள நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல் என அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் இன்று இதன் மூன்றாவது பாடலும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் விக்ரம் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதனை பட குழு வெளியிடாமல் மிகவும் சர்ப்ரைஸ் ஆக வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தை தூண்டி உள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…