#image_title
1800 களின் இறுதியில் மிகப்பெரிய அரசியல் எழுச்சி தொடங்கியது ஒட்டுமொத்த தேசமும் சுதந்திரப் போராட்டத்தில் இறங்க முடிவெடுத்தது. அந்த காலகட்டத்தில் ஆந்திராவில் சுதந்திர இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியடிகளின் கதர் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரும் பத்திரிக்கையாளர், தேசியவாதி மற்றும் அரசியல்வாதி ஸ்ரீ காசி நாதுனி நாகேஸ்வர ராவ் ஆவார். மக்கள் மேம்பாட்டிற்காகவும் சுதந்திரத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவரது சேவைகளை பாராட்டி கலாப்ரபூர்ணா டாக்டர் ஆஃப் டாக்டர் சமுக பட்டதை மக்கள் அவருக்கு வழங்கினர்.
ஸ்ரீ நாகேஸ்வர ராவ் ட்ரஸ்ட் 1885 ஆம் ஆண்டு இன்று சென்னை என்று அழைக்கப்படும் அன்றைய மெட்ராஸில் தொடங்கப்பட்டது. இதில் ஆயுர்வேதமே பிரதானமாக இருந்தது. அங்கு இருந்த காலகட்டத்தில் ஆயுர்வேதத்தை பற்றி பல நூல்களைப் படித்து ஆராய்ச்சி செய்து வந்தார் நாகேஸ்வர ராவ். கல்கத்தாவில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து பெற்ற அனுபவத்துடன் தனது அறிவையும் இணைத்து தலைவலி மற்றும் பிற வலிகளுக்கு சில ஆயுர்வேத மருந்துகளை தயாரித்தார் ஸ்ரீ நாகேஸ்வரராவ்.
ஸ்ரீ நாகேஸ்வர ராவ் அவர்களின் கடின உழைப்பினாலும் ஆராய்ச்சினாலும் முயற்சியினாலும் உருவானது தான் அம்ருதாஞ்சன் தைலம். கடந்த 120 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் ஒரு பழம்பெரும் நிறுவனம் தான் அம்ருதாஞ்சன். அமிர்தாஞ்சன் தைலமாக முதல் விற்பனையான பிறகு தற்போது இருமல், சளி, தலைவலி போன்றவற்றிற்குமான மருந்துகளை விற்பனை செய்து வருகிறது.
உள்நாட்டு ஆராய்ச்சியின் அடிப்படையில் தியோபிலின் போன்ற மருந்து இடைநிலைகளையும் உற்பத்தி செய்கிறது அமிர்தாஞ்சன். இந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்காகவே சென்னை அருகே உள்ள ஆலந்தூர் தொழிற்பட்டியில் மூன்று ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 1893 தொடங்கப்பட்ட அம்ருதாஞ்சன் இசைக் கச்சேரிகளில் தான் உருவாக்கிய தைலத்தை இலவசமாக விநியோகித்து இந்த நிறுவனத்தை பிரபலப்படுத்தினார் ஸ்ரீ நாகேஸ்வரராவ். இந்த தைலத்தின் மூடியில் பாம்பே என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டு வந்தது. 1936 ஆம் ஆண்டில் அம்ருதாஞ்சன் லிமிடெட் என்ற பெயரில் பொது வரையறுக்கப்பட்ட பெரும் நிறுவனமாக மாறியது.
அமிர்தாஞ்சன் ஹெல்த் கேர் என்ற பெயரில் பல வகையான வலி நிவாரணிகளை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தை சம்பு பிரசாத் எனப்படும் ஸ்ரீ நாகேஸ்வர ராவ் அவர்களின் பேரன் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு தனி மனிதனால் இலவசமாக விநியோகிப்பட்டு பின்னர் ஒரு ரூபாய்க்கு தைலங்களை விற்று அடிமட்டத்தில் இருந்த அம்ருதாஞ்சன் நிறுவனம் இன்றைய மதிப்பின்படி சுமார் 2000 கோடி மதிப்புள்ள பெரும் நிறுவனமாக மாறியுள்ளது.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…