#image_title
இயக்குனர் சுராஜ் இயக்கும் படங்களில் தொடக்கத்தில் காமெடி நடிகனாக நடித்து வந்தவர் வடிவேலு. தலைநகரம் மற்றும் மருதமலை ஆகிய படங்களில் இவர்களின் காம்பினேஷன் பட்டையக் கிளப்பியிருக்கும். இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படிக்காதவன் திரைப்படத்தில் முதலில் வடிவேலுதான் காமெடியனாக நடிக்க இருந்தது. அவர் சில நாட்கள் ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டார்.
ஆனால் ஷூட்டிங்கின் போது வடிவேலுவை ‘இப்படி நடியுங்கள்… அப்படி நடியுங்கள்” என சொல்லி அவரின் ஈகோவை தூண்டியுள்ளார் தனுஷ். அதனால்தான் அந்த படத்தில் இருந்து அவர் வெளியேற, அவருக்கு பதில் விவேக் வந்தார். இதை வடிவேலுவின் சக நடிகரான பாவா லட்சுமணன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதன் பின்னர் வடிவேலு நடித்து அந்த படத்தில் அவரது காமெடி வைரல் ஹிட்டானது. ஆனாலும் தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை.
இந்நிலையில் இதுபற்றி பிரபல எழுத்தாளர் பிச்சைக்காரன் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் “சினிமாவில் வெற்றி என்பது பல சமயங்களில் தோல்வியின் மறுவடிவம் என்பதற்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா “தர்” ஹிந்திப் படத்தை உதாரணமாய்ச் சொல்வார். படம் மிகப்பெரிய வெற்றி ஆனால் அதன் நாயகன் சன்னி தியோல் அதில் நடித்ததற்கு பிற்பாடு வருந்தினார். காரணம் அந்தப்படத்தில் அதிக பெயர் வாங்கியது வில்லன் ஷாருக்கான் தான். அந்தப்பப”வெற்றி அப்பட நாயகனின் திரைவாழ்வையே முடிவுக்கு கொண்டுவந்து விடடது
தமிழில் உதாரணம் என்றால் தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தை சொல்லலாம். வடிவேலு நடிக்க வேண்டிய,கேரக்டரை ( அவர் விலகியதால்) விவேக் நடித்தார். ரிஸ்க் எடுக்கறதுதான் ரஸ்க் சாப்பிடுறமாதிரி என்பதுபோன்ற வடிவேலு வசனங்கள் அவரது பாடி லாங்குவேஜ் என காப்பி அடித்தது மாதிரி இருக்கும் உண்மையில் அவர் காப்பி அடிக்கவில்லை வடிவேலுக்கான ஸ்க்ரிப்ட் என்பதால் அப்படி ஆகிவிட்டது
ஆனால் படம் பாரக்கும்போது அவர் சரககு காலி ஆகிவிட்டதால் வடிவேலுவை நகல்,செய்கிறார் போல என தோன்றி அவரது,இமேஜை காலி செய்தது. படம் வெற்றி விவேக் நகைச்சுவை பாராடப்பட்டது. ஆனால் அவரது இமேஜ் மொத்தமாக அழிந்தது.” எனக் கூறியுள்ளார். அவர் சொல்வது போல படிக்காதவன் படத்துக்குப் பிறகு விவேக்கின் காமெடி கேரியர் நெகட்டிவ்வில்தான் சென்றது.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…