Categories: சினிமா

தமிழ் சினிமாவில் கெட்ட பழக்கம் எதுவும் இல்லாத 6 ஹீரோக்கள்… மற்ற நடிகர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் டி. ராஜேந்தர்…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் கூட கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். கையில் சிறிது பணம் கிடைத்தால் கூட மது, மாது, புகை என செல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சாதாரண மனிதர்களுக்கு இந்த நிலைமை என்றால் நடிகர்களுக்கு கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.. ஆனால் அந்த வாய்ப்புகளிலும் நழுவாமல் கண்ணியமாக எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் சில நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி இனி காண்போம்.

1. சிவகுமார்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவகுமார். 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சிவகுமார் பல விருதுகளையும் ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். கடவுள் முருகன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கச்சிதமாக பொருந்தியவர் சிவகுமார். இவர் அன்றிலிருந்து இன்று வரை எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். இந்து மதத்தை வளர்க்கும் விதத்தில் மேடை பேச்சுக்களையும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக உதவிகளையும் செய்து வருகிறார்.

2.ராமராஜன்
80களின் உச்சபட்ச நடிகராக இருந்தவர் ராமராஜன். கிராமத்து நாயகன் என்று மக்களால் அழைக்கப்படுபவர். ரஜினி கமல் ஆகியோருக்கு இணையாக போற்றப்பட்டவர். கிராமத்து கதைகளாக தேர்ந்தெடுத்து பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன். தனது படங்களில் புகை பிடிப்பது மது அருந்துவது போன்ற எந்த ஒரு காட்சியிலுமே நடிக்க மாட்டார். அதே போல் நிஜ வாழ்க்கையிலும் அதை கடைபிடித்து வருபவர் ராமராஜன்.

3. டி ராஜேந்தர்
அண்ணன் தங்கை காதல் பாசம் போன்ற செண்டிமெண்ட் படங்களை எடுத்து பிரபலமானவர் டி ராஜேந்தர். குடும்பத்தின் பாசப்பிணைப்புகளை எதார்த்தமாக எடுத்துக்காட்டுபவர் இயக்குனர் மற்றும் நடிகர் டி. ராஜேந்தர். இவர் தான் இயக்கிய படத்திலும் சரி நடித்த படத்திலும் சரி கதாநாயகிகளை தொட்டு நடிக்கவே மாட்டார். அதே போல் நிஜ வாழ்க்கையிலும் எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்து வருகிறார் டி ராஜேந்தர்.

4. ஆனந்தராஜ்
பெரும்பாலான தமிழ் படங்களில் வில்லன் நடிகராக பணிபுரிந்தவர் ஆனந்தராஜ். என்னதான் சினிமாவில் வில்லனாக கெட்டவனாக மக்கள் திட்டும்படி இருந்தாலும், ஆனந்தராஜ் நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்ல மனிதர் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் மற்றும் ஒரு டீ டோட்டலர் ஆகவே எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

5. கார்த்தி
தமிழ் சினிமாவில் மசாலா திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் கார்த்தி. மூத்த நடிகர் சிவகுமாரின் இளைய மகன் ஆவார் மற்றும் நடிகர் சூர்யாவின் தம்பி இவர். பல காதல் படங்களிலும் ஆக்சன் படங்களிலும் செண்டிமெண்ட் படங்களிலும் நடித்த கார்த்தி வெளிநாட்டில் தனது படிப்பை முடித்தவர். என்னதன் வெளிநாட்டில் படித்து Handsome ஹீரோவாக இருந்தாலும் தனது தந்தையை போலவே கண்ணியமாக இருந்து வருகிறார் கார்த்தி.

6. சிவகார்த்திகேயன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று சாதித்த நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். 2K கிட்ஸ்க்கு மட்டுமல்லாமல் அனைத்து சிறுவர் மற்றும் பெரியோர் வரை இவரது படங்களை ரசித்துப் பார்ப்பர். இவர் உழைப்பினால் முன்னேறியவர். அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டி சிவகார்த்திகேயன் அவர்களும் கட்டுக்கோப்பான வாழ்க்கையும் மனைவி மற்றும் குடும்பத்தை மதிப்பவராகவும் அனைவருக்கும் ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

admin

Recent Posts

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

21 minutes ago

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

27 minutes ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

32 minutes ago

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை…. 2028-க்குப் பிறகே தேர்தல்?…. வெளியான பரபரப்புத் தகவல்….!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…

38 minutes ago

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

44 minutes ago

14 வயது சிறுவனுடன் 19 வயது இளம்பெண் தனிமையில்… நேரில் பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்…. அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி…. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…

2 மணத்தியாலங்கள் ago