BREAKING: திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக மூத்த நிர்வாகி?… சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 16, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சியினரும் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளர் மன ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு கட்சி மோதல்கள் ஏற்பட்டுள்ளது. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒவ்வொரு பக்கமும் பிரிந்து கிடக்கும் நிலையில் கட்சி வெற்றி பெறுவது என்பதே தற்போது சவாலான ஒன்றாக மாறிவிட்டது. இந்த முறை அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வேலைகளை எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகின்றார்.

இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் திமுகவில் தம்பிதுரை இணைய உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்த நிலையில் தற்போது அதற்கு தம்பிதுரை முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் தம்பிதுரை முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இந்த இணைப்பு விழாவில் அவர் பேசுகையில் கூட்டணி கட்சிகள் இருந்தாலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இபிஎஸ் தனித்து ஆட்சி அமைப்பார் என்று சூளுரைத்துள்ளார். இதன் மூலம் அதிமுகவில் தம்பிதுரை தொடர்ந்து நீடிப்பார் என்பதும் திமுகவில் இணைய போவதில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.