தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு இந்த முறையும் திமுக ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என்ற நம்பிக்கையோடு முதல்வர் ஒரு பக்கம் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக தமிழகத்தில் ஆட்சியை நிலைநாட்ட ஒரு பக்கம் வேலைகளை செய்து கொண்டிருக்கின்றது. இவர்களுக்கு நடுவே விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் பயணித்து மக்களுக்கு புதிய ஆட்சியை தர வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகின்றார். இதனிடையே பாமகவில் தொடர்ந்து அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் நிலவிக் கொண்டிருக்க தமிழக அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். பொதுக்குழுவில் 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி, கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. திமுகவை அட்டாக் செய்யும் அன்புமணி, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைய விரும்பும் நிலையில் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் நாளை அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி.
