ஆக்சன் கிங் அர்ஜுன் கடைசியாக லியோ படத்தில் வில்லனாக நடித்தார். இவரது மகள் ஐஸ்வர்யா விஷால் நடிப்பில் உருவான பட்டத்து யானை படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவும் காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்தனர். இருவருக்கும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்றது.
![]()
கடந்த 14ஆம் தேதி இவர்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா நடிக்க கூடாது என தம்பி ராமையா கண்டிஷன் போட்டதாகவும் அதற்கு அர்ஜுன் குடும்பத்தினர் சம்மதம் சொல்லியதாகவும் தெரிகிறது. சமீபத்தில் தம்பி ராமையா தனது மருமகள் குறித்து பேசியதாவது, நான் பாப்பாவ முதல் தடவை சந்திக்கும்போது இதை தான் கூறினேன். ஒரு மனிதன் பிறக்கும்போது அவனது நிம்மதி தாய் தந்தையிடம் உள்ளது.
)
அதற்கு பிறகு வீதியில் விளையாடும்போது நாம் யாருடன் விளையாடுகிறோமோ அவர்களிடம் நிம்மதி என்ற பந்து போகிறது. பள்ளிக்கூடத்தில் பக்கத்தில் யாரு இருக்கிறார்களோ அவர்களிடம் நிம்மதி இருக்கிறது. பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரிடம் கல்லூரிக்கு செல்லும் போது பேராசிரியர்களிடம் நிம்மதி போகிறது.

வேலைக்கு போகும்போது நம்மை விட உயர்ந்த இடத்தில் இருக்கும் அதிகாரிகளிடம் நிம்மதி போகிறது. இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம் அருகில் இருப்பவர்களிடம் அந்த நிம்மதி போகிறது. அடுத்ததாக நிம்மதி என்ற பந்து நம்மை கரம் பிடிக்கும் துணை இடம் போகிறது. பாப்பாவை சந்திக்கும் போது எங்க குடும்ப நிம்மதி என்ற பந்து உன் மடியில் வந்து விழுந்து இருக்கு. இனிமே எல்லாமே உன்கிட்ட தான் இருக்கு.

நீ தான் அதை நல்லபடியா பார்த்துகிட்டு ஒரு தாயாக இந்த குடும்பத்தை வழி நடத்திக் கொண்டு போகணும்னு சொன்னேன். அர்ஜுன் எனக்கு சம்மந்தி இல்ல. அவர் எனக்கு சார் நான் அப்படிதான் அவரை கூப்பிடுவேன். அவர் சினிமாவில் ஒரு சுயம்புவாக வளர்ந்து நின்றவர். அவரை எங்கள் குடும்பத்திற்கு சம்மந்தி ஆகிய கடவுளுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
