ரெட் அலர்ட் கொடுத்து.. கவர்ச்சியில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Mahalakshmi on ஜூன் 16, 2024

Spread the love

ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை மிர்னா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

2020 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான பிக் பிரதர் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மிர்னா.

   

 

இதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தெலுங்கில் கிரேசி பெல்லா, உக்கிரம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன் பிறகு ஆஹா தமிழ் என்ற ஓடிடி தளத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான துர்கா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

இந்த திரைப்படம் மூலமாக பிரபலமான இவர் தற்போது தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் 2 திரைப்படத்திலும் மிர்னா நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிறையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.