6 வருஷமா அந்த கிரிக்கெட் வீரரை ரகசியமாக காதலித்தேன்.. வீட்டுல சொல்ல பயமா இருந்துச்சி.. மனம் திறந்த தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணா..

By admin on கார்த்திகை 17, 2023

Spread the love

நடிகர் தலைவாசல் விஜய், தமிழ் சினிமாவில் மிக யதார்த்தமாக நடிக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர். எந்த கேரக்டர் என்றாலும், அதில் தனது தனித்துவமான நடிப்பை அழுத்தமான முத்திரையாக பதித்துவிடுவார். காமெடி, வில்லன், குணச்சித்திரம் என எந்தவிதமான கேரக்டரிலும் அவரது நடிப்பை குறை காண முடியாது. அவரது மகள் ஜெயவீணா. இவர் நீச்சல் வீராங்கணை. நேபாளம், காத்மண்டுவில் நடந்த தெற்காசிய நீச்சல் போட்டிகளில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் பாபா அபரஜித்தை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 Actor Thalivasal Vijay

   

தமிழ்நாடு கிரிக்கெட் அணியிலும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியிலும் பாபா அபரஜித் பங்கேற்று விளையாடியவர். சில மாதங்களுக்கு முன்புதான் ஜெயவீணா, பாபா அபரஜித் திருமணம் நடந்தது. அதுகுறித்து தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணா, அவரது கணவர் பாபா அபரஜித் ஒரு நேர்காணலில் பங்கேற்றனர். அப்போது ஜெயவீணா கூறியதாவது, ஆறு ஆண்டுகளாக, யாருக்கும் தெரியாமல் நாங்கள் காதலித்தோம். ஆனால், அப்பா தலைவாசல் விஜயிடம் இதை சொல்வதற்கு பயமாக இருந்தது. அப்பாவும், அம்மாவும், நாங்கள் காதலை எதிர்ப்பவர்கள் இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் எங்களிடம் தாராளமாக சொல்லுங்கள் என்றுதான் ஏற்கனவே கூறியிருந்தனர்.

   

 Actor Thalivasal Vijay

 

என் அண்ணன் கல்யாணம் நடந்த போதே, என் திருமணம் பற்றி கேட்டார்கள். நான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டுச் சொல்கிறேன் என்றேன். பிறகு படிப்பை முடித்த பிறகு, ஒருநாள் அவர்களே என் திருமண பேச்சை ஆரம்பித்தனர். அபரஜித் பேரை சொன்னவுடன், அவரா என்ற அவர்கள் ஓகே சொல்லிவிட்டனர். ஏனென்றால், நாங்கள் நண்பர்கள் என அதுவரை நினைத்திருந்தால் ஆச்சரியப்பட்டனர், என்றார். பாபா அபரஜித் கூறுகையில், என் அம்மாவிடம் ஜெயவீணா குறித்து சொன்னவுடன் ஓகே கூறிவிட்டார். ஜெயவீணா என்று நான் சொன்னவுடனே எனக்கு தெரியும் என்றார். என் அம்மா மனதில், அப்படி இருக்கலாம் என்று ஏற்கனவே தோன்றி இருக்கிறது, என்று அவர் கூறியிருந்தார்.