Connect with us

கூட்டு சேர்ந்து விசித்ரா, அர்ச்சனாவை ஜெயிலுக்கு அனுப்பிய ஹவுஸ்மேட்ஸ்… போக மறுத்தத்தினால் தினேஷ் எடுத்த அதிரடி முடிவு…

CINEMA

கூட்டு சேர்ந்து விசித்ரா, அர்ச்சனாவை ஜெயிலுக்கு அனுப்பிய ஹவுஸ்மேட்ஸ்… போக மறுத்தத்தினால் தினேஷ் எடுத்த அதிரடி முடிவு…

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது .  இந்நிகழ்ச்சியில் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் , வைல்ட் கார்டு 5 போட்டியாளர்கள் என மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் தற்பொழுது வரை 8 போட்டியாளர்கள் வரை வெளியேறி உள்ளனர்.

 

   

இவர்களில் கடந்த வாரம் ஐஷு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் .இந்நிலையில் இந்த வார கேப்டனாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பிரச்சினைகளும் சண்டைகளும் நடைபெற்றுக் கொண்டுதான் தற்பொழுதும் வருகிறது. அந்த வகையில் இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

   

 

அதில் அர்ச்சனாவையும் விசித்திராவையும் போரிங் போட்டியாளர்கள் எனக் கூறி ஜெயிலுக்கு மற்ற ஹவுஸ்மேட்கள் டார்கெட் செய்து அனுப்பியுள்ளனர். இதனை அவர்கள் எதிர்த்து நாங்கள் ஜெயிலுக்குப் போக மாட்டோம் என்று கூறி வருகின்றனர். தற்பொழுது வெளிவந்த இந்த ப்ரோமோ வீடியோவில் ‘வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்’ என்ற பெயர் எடுத்து நான் ஜெயிலுக்கு போக  மாட்டேன் என்று அர்ச்சனா கூறுகிறார். ‘என்னடா இப்படி முதுகுல குத்திட்டீங்க எல்லாரும்’ என்று விசித்ரா மணியை பார்த்து கேட்கிறார்.

பிக் பாஸ் அவங்கள கொஞ்சம் சீக்கிரமா ஜெயிலுக்கு அனுப்பி விடுங்க என்று bully gang கூறுகின்றனர். விசித்ரா, அர்ச்சனா இருவரும் தினேஷிடம் ‘நாங்க ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர் என்பதை ஏத்துக்க மாட்டோம்’ என்று வாதாடுகின்றனர். அவங்க  சாப்பிடட்டும் . அங்கேயே தூங்கட்டும். ஆனா வீட்டுக்குள்ள மட்டும் வரக்கூடாது. நான் ஸ்மால் ஹவுஸ்க்குள்ளே அவங்களை விட மாட்டேன். அவங்க அங்க இருந்து எந்திரிச்சா நேரா ஜெயில்தான். யாரும் அவங்கள உள்ள விடாதீங்க என்று தினேஷ் கூறுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

More in CINEMA

To Top