இந்த போட்டோவில் கியூட்டாக சிரிக்கும் ‘தளபதி விஜய்’ பட நடிகை யாருன்னு தெரியுதா…?

By Begam

Published on:

சோசியல் மீடியாவில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்பொழுது வெளியாகி வைரலாகுவது வழக்கம். அந்தவகையில் தற்பொழுது தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை மீனாட்சி சவுத்ரியின் சிறுவயது  புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனாட்சி சவுத்ரி.

   

இவர்  ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் அழகுப் போட்டியின் தலைமை வைத்திருப்பவர்.இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் . நடிகை மீனாட்சி சவுத்ரி ஃபெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் ஹரியானா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். அங்கு அவர் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார்.

சவுத்ரி மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். முதல் ரன்னர் அப் ஆக முடிசூட்டப்பட்டார். இவர்  2021 இல் இசட வாகனமுலு நிலுபரடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார்.

தற்பொழுது இவர் தமிழில் தளபதி விஜயுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.