80-களில் தமிழ் சினிமாவை கலக்கிய ‘ஒருதலை ராகம்’ பட நடிகை, இப்போ என்ன பன்றாங்க தெரியுமா..? வெளியான தகவல்..

By Ranjith Kumar

Updated on:

தலைமுடி பங்க் வைத்து சட்ட காலரை பெருசாக வைத்து, கட் ஷர்ட் பூட் பேண்ட், பெரிய பெல்ட் இதுபோன்ற 80ளில் வளம் வந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் ஸ்டைலை இப்ப படம் மூலம் தான் வெளியானது. அப்படம் தான் ‘ஒருதலை ராகம்‘ . இசை, கதை, வசனம், இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று முதன்முதலாக திரையில் வித்தை காட்டியிருந்தார் இயக்குனர் நடிகருமான டி.ராஜேந்தர்.தமிழ் சினிமா அதுவரை கண்டிராத உணர்வுப் பூர்வ காதலை முதன்முதலாக வெளிக் கொண்டு வந்த படம். டி.ராஜேந்தரின் உருக வைக்கும் நடிப்போம், கிளாசிக் ஹிட் பாடல்களும் படத்தை வேறொரு இடத்திற்கு எடுத்துச் சென்றது. திரையரங்குகளில் ஒருவருடத்திற்கும் மேல் ஓடி சாதனை புரிந்தது ஒருதலை ராகம்.


இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் படத்தில் ஹீரோ முதல் அனைவருமே புதுமுகங்கள். வலுவான கதையும், நடிகர்களின் உணர்வுப் பூர்வமான தெளிவு மற்றும் அடிப்பின் திறமையும் புத்துணர்ச்சி ஊட்டும் நடிப்பாலும் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சங்கர், தியாகு, சந்திரசேகர், ரூபா, ரவீந்திரன், உஷா ராஜேந்தர் உள்ளிட் பலர் நடித்திருந்தனர்.இதில் ஹீரோயினாக நடித்த ரூபா தேவி அப்போதைய இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டார்.ஒருதலை ராகம் படத்திற்கு பின்னர் தமிழில் சில ஆண்டுகளிலேயே பல படங்கள் நடித்தார். 1980-82 ஆகிய இந்த இரண்டு ஆண்டில் மட்டும் 15கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர்  பின்னர் 8 ஆண்டு கழித்து பாட்டுக்கு நான் அடிமை படத்தில் ராமராஜன் தங்கையாக நடித்தார். அதன் பின்னர் தமிழில் இவரால் ஜொலிக்க முடியவில்லை இருப்பினும் கன்னட திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார்.

   

90க்கு பின்னர் இவர் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இருப்பினும் கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்தார். இவர் நடிகை என்பதை தாண்டி சிறந்த டான்சரும் கூட கன்னட சினிமாவில் பல படங்களில் செம குத்தாட்டம் போட்டு இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய போது தமிழில் ஏன் டான்சராக நடிக்கவில்லை என்ற கேள்விக்கு அதுக்குத் தடையாக இருந்தது, `ஒருதலை ராகம்’ போன்ற படங்கள்தான்’

ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் சேலைகட்டி பவ்யமான பெண்ணாக நடிச்சிட்டேன். அதனால, என்னை எல்லா ரசிகர்களும் அப்படியே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த நேரத்தில் டான்ஸர், கிளாமர் ஆர்ட்டிஸ்ட் என வந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என இயக்குநர்களும் எனக்கு ஹோம்லி கேரக்டர்களையே கொடுத்துட்டாங்க. கடைசிவரை தமிழில் ஒரு படத்தில்கூட டான்ஸராக நடிக்க முடியலையே என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. மற்றபடி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட எல்லா ரோல்களிலும் நடித்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.தற்போது நான் சீரியல் மற்றும் படங்களில் நடித்து வருகிறேன் என் மகள் என் கணவர் என்று என் வாழ்க்கை மிகவும் நல்ல பயணமாக போய்க்கொண்டிருக்கிறது.

author avatar
Ranjith Kumar