மலேசியாவில் நடைபெற்ற’ஜனநாயகன்’திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ‘தளபதி கச்சேரி’ நிகழ்ச்சியில், நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களுக்காக சுமார் 800 மீட்டர் நீளமுள்ள மேடையில் ஓடிச் சென்ற சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேடையில் பேசி முடித்த எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய் இருக்கும் அந்த இடம் வெகு தொலைவில் இருப்பதால் தம்மால் அங்கு வர முடியாது எனக் குறிப்பிட்டார்.
After SA Chandrasekhar appa speech he said he can’t go to Vj Anna place because it’s too long so @actorvijay Anna immediately runs off on this 800m ramp walk without stopping!#ThalapathyVijay Anna!
Podra gommala #JanaNayaganAudioLaunch inga than blast uh blast uh!💥🔥🥳💯🇲🇾 pic.twitter.com/213xeIFFj8
— 💥VJSTR💥 (@kaarthik_vj_str) December 27, 2025
இதனால் சற்றும் யோசிக்காமல் தளபதி விஜய் அந்த 800 மீட்டர் நீளமுள்ள மேடையில் ஓடிச் சென்ற காட்சி அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. தூரத்தைப் பொருட்படுத்தாமல் தனது தந்தைக்காக அவர் காட்டிய அந்த வேகம், அவரது அர்ப்பணிப்பையும் அன்பையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
