நேற்று, அதிரடியாக கட்சிப் பெயரை அறிவித்துவித்துவிட்டு, இன்று கூலாக GOAT பட ஷூட்டிங்க்கு வந்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ..

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த லியோ திரைப்படம் தாறுமாறான வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

vijay padayatra polical entry sixteen nine

சினிமாவில் மட்டுமல்ல தற்பொழுது அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், அவர் நேற்று  தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி அவர் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

   

அந்த அறிக்கையில் ‘நடப்பு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும்  என்றும் ,  அரசியல் என்பது எனக்கு பொழுதுபோக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை.

அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த பணிகளை, கட்சி வேலைகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்’ எனவும் கூறியிருந்தார். இப்படி அரசியல் கட்சியை திடீரென அரம்பித்து அறிக்கை வெளியிட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்து விட்டு அவர் கூலாக GOAT பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

author avatar