தொகுப்ப்பாளினியாக தனது திரை வாழ்க்கை பயணத்தை தொடங்கிய கிகி, தற்பொழுது மாடல், நடிகை என பன்முகங்களை கொண்டுள்ளார். இவருடைய இயற்பெயர் கீர்த்தனா.ரசிகர்கள் இவரை செல்லமாக கிகி என்று அழைக்கின்றனர். இதுவே திரையுலகில் இவரது பெயராயிற்று. இவர் நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வெளியிடும் ரொமான்ஸ் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்யப்படுகின்றன.
சாந்தனுவை திருமணம் முடித்த பின்னர் கிகி டி நகரில் ஒரு நடன ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் நடிகர் பாக்கியராஜ். நடிகர் பாக்யராஜின் மகனாக வாரிசு நடிகராக திரையுலகில் கால் பதித்தவர் நடிகர் சாந்தனு. இவர் நடிப்பில் வெளிவந்த சக்கரகட்டி, சித்து +2 போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனக்கான அடையாளத்தை இதுவரை பெற முடியவில்லை. இந்த நிலையில், அவர் நீண்ட நாள் காத்திருந்ததற்கு பலனாக அவருக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. அதன்படி ஜெய்குமார் இயக்கத்தில் அசோக் செல்வனும் சாந்தனுவும் இணைந்து நடித்த ப்ளூ ஸ்டார் என்கிற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.
நடிகர் சாந்தனு, 2015-ம் ஆண்டு கிகி என்கிற கீர்த்தனாவை காதலித்து கரம்பிடித்தார். இந்த நிலையில் சமீபத்தில் கீர்த்தி உடன் ஜோடியாக பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சாந்தனு, குழந்தை பெற்றுக்கொள்ளாததால் தாங்கள் சந்திக்கும் கஷ்டங்களை பற்றி கூறியுள்ளனர். ‘ஏதாச்சும் கல்யாணத்துக்கு போனாலே அடுத்து உங்களுக்கு தான என குழந்தை பற்றி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள், நாங்கள் இருவருமே தற்போது எங்கள் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறோம். அதே நேரத்தில் எது எது எந்த நேரத்துல நடக்கணுமோ அது அது அந்த நேரத்துல நடக்கும்’ என கூறி அனைவரது வாயையும் அடைத்துள்ளனர்.