தமிழ் ரசிகர்களை தொடர்ந்து கேரளா ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ..

By Deepika

Published on:

 

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் என்னும் படத்தில் நடித்து வருகிறார். மீனாட்சி, சினேகா, லைலா, பிரசாந்த், அஜ்மல் என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் இணைந்துள்ளனர். இப்படத்தில் விஜய் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.

   
Vijay gets mobbed by kerala fans

இந்தநிலையில் கோட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது. இதற்காக விஜய் 14 வருடங்கள் கழித்து கேரளா சென்றுள்ளார். விஜய் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் இறங்கியபோது அவரை காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. விஜய்யின் காரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள், அப்போது அவரின் காரும் சேதம் அடைந்தது.

Vijay selfie with fans in kerala
Vijay met fans in stadium

இந்தநிலையில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய், அங்கு ஒரு மைதானத்தில் ரசிகர்களை சந்தித்துள்ளார், வேன் மீது ஏறி நின்று, ரசிகர்களை பார்த்து கையசைத்த விஜய் எப்போதும் போல் ரசிகர்களுடன் ஒரு செல்பி எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay met fans in stadium

இதற்கிடையே சமீபத்தில் விஜய் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் என்ட்ரி அவரது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்தாலும் படம் நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

 

author avatar
Deepika