Connect with us

‘பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை’.. மழையால் பாதிக்கப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அள்ளி அள்ளிக்கொடுத்த தளபதி விஜய்… 

CINEMA

‘பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை’.. மழையால் பாதிக்கப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அள்ளி அள்ளிக்கொடுத்த தளபதி விஜய்… 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். தற்பொழுது இவர்  அரசியலிலும் களமிறங்க உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்காக அவர் விஜய் மக்கள் இயக்கம் தொடங்கி அதன்மூலம் மக்களுக்கு பல்வேறு வகையில் நலத்திட்ட உதவிகளை அவ்வப்பொழுது வழங்கி வருகிறார். சென்னை வெள்ளத்திலும் சரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளங்களிலும் சரி விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்தனர்.

அந்த வகையில் தற்பொழுது கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று செய்து வருகிறார் .இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து நடிகர் விஜய் மதியம் 1 மணி அளவில் நிகழ்ச்சி நடைபெறும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கே டி சி நகரை வந்தடைந்தார்.

   

 

இதைத் தொடர்ந்து அவர் 1500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய பையை நடிகர் விஜய் வழங்கினார்.  மேலும் அங்கு வந்திருந்த யாரையும் எழுந்திரித்து நிற்க வேண்டாம் எனக் கூறியும்,  மேடைக்கு வரவழைத்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்காமல் அவர்கள் அருகிலேயே சென்று நலம் விசாரித்து உதவி தொகை கொடுத்து வருகிறார்.

மேலும் நடிகர் விஜய் கனமழையால்  வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ .10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், இது மட்டுமின்றி வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் ரூபாயும் நிவாரண நிதியாக கொடுத்து வருகிறார். தற்பொழுது அவரின் இந்த செயலை மக்கள் அனைவரும் மனதார பாராட்டி வருகின்றனர் .

Continue Reading
To Top