லியோ பரபரப்பே ஓயல…! அதுக்குள்ளே அடுத்த படத்துக்கு பூஜை போடும் தளபதி விஜய்…! எங்க? எப்போ தெரியுமா…?

By Begam on புரட்டாதி 29, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர்  நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜயுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வருகிறது.

   

இன்னும் சில நாட்களில் லியோ படம் வெளியாக உள்ளது. எனவே தொடர்ந்த லியோ படக் குழு அப்டேடை வெளியிட்டு வருகிறது. கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் விஜய் த்ரிஷா கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

   

 

 

இந்த நிலையில், ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்பட்டு வந்தது.  ஆனால் இந்த ஆடியோ லான்ச் திடீரென தடை செய்யப்பட்டது. ஏனெனில்  லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இதுவரை 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உலக அளவில் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் லியோ ஆடியோ வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்படி லியோ திரைப்படமே வெளியாகாமல் ரசிகர்களை பரபரப்பாக வைத்துள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி தளபதி 68 திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்படும் என்றும், மேலும் அடுத்த நாளே படத்தின் பாடல் காட்சி ஒன்று சென்னையில் படமாக்கப்படும் என்றும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த செய்தி தளபதி ரசிகர்களை செம குஷிப்படுத்தி உள்ளது