ஏர்போர்ட்டில் மாஸ்க் போட்டு மாஸாக entry கொடுத்த தளபதி விஜய்… இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ… 

By Begam on புரட்டாதி 12, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. லியோ திரைப்படத்தில் அர்ஜுன், கௌதம் மேனன் மற்றும் திரிஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

இந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஆக்சன் என்டர்டெயின்மென்ட் ஜெனரில் உருவாக உள்ள இந்த படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.

   

 

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து தற்பொழுது தளபதி 68 திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழு அமெரிக்காகவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றிருந்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

தற்பொழுது நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். இனி லியோ திரைப்படத்தின் ட்ரைலர் லான்ச், ப்ரோமோஷன், ஆடியோ லான்ச் போன்ற வேலைகளில் தீவிரமாக ஈடுபடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சென்னை ஏர்போர்ட்டில் மாஸாக வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by NewsBugz (@newsbugz_official)