தளபதி செம்ம கியூட் டோய்.. GOAT பட ஷூட்டிங்கில் ஸ்கேட்டிங் செய்து மகிழும் விஜய்.. வைரலாகும் வீடியோ..

By Archana on சித்திரை 9, 2024

Spread the love

AGS என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பின் கீழ் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் GOAT. இதில் நடிகர் பிரஷாந்த், பிரபுதேவா, நடிகை சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும், சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் கேரளா மாநிலத்தில் உள்ள திருவந்தான்புரம் பகுதியில் நடந்தது. கேரளா ரசிகர்களை சந்தித்து மாலை பெற்றது, செல்பி எடுப்பது என தளபதி விஜய் அவர்கள் மிகவும் பிசியாக இருந்தார்.

எதிர்பார்க்காத அளவுக்கு தளபதி ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், அங்கு ஷூட்டிங் முடிந்த கையேடு விஜய் சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் GOAT படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் ரஷியாவில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் படக்குழு ரஷியாவுக்கு சென்றது. தளபதி விஜயும் GOAT பட ஷூட்டிங்க்காக ரஷ்யா சென்றார்.

   

தற்போது ரஷியாவில் படப்பிடிப்புக்கு நடந்து வரும் நிலையில் தளபதி விஜய் அவர்களின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. தளபதி விஜய் ஸ்கேட்டிங் செய்து மகிழ்கிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது.