தளபதி 69 படத்துக்கு விஜய் ரெடியா இருக்காரு.. ஒரே போடாக போட்ட வெற்றிமாறன்.. அவ்ளோ நாள் தாக்கு புடிப்பார்களா ரசிகர்கள்..?

By Ranjith Kumar

Updated on:

தளபதி விஜய் அவர்கள் தலைவர் விஜயா மாறி அரசியல் கட்சி அறிவித்த பின், தனது தளபதி 69 படத்தை முடித்துவிட்டு நான் முழு நேரமாக அரசியல்வாதியாக ஆகப் போகிறேன் என்று அறிவித்தப்பின், அவரின் 69 படத்திற்கு யார் தான் டைரக்டர் என்று நீண்ட காலமாக இணையத்தில் பெருமளவு பேசப்பட்டு வருகிறது. அந்த நிலையில் விஜய் 69 ஆவது படத்தை நெல்சன், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், ஏ.ஆர் முருகதாஸ் என்று பல இயக்குனர்கள் பெயர்கள் பேச்சு அடிபட்டு வந்து கொண்டிருந்தது,

ஆனால் சமீப காலமாக வெற்றிமாறன் அவர்கள் விஜயின் 69 வது படத்தை இயக்க உள்ளதாக பெருமளவு பேசப்பட்டு கிட்டத்தட்ட உறுதியான நிலையில் வதந்திகள் பரவி வந்து கொண்டிருந்தது, இதற்கிடையே விஜய் இடம் வெற்றிமாறன் கதை சொல்லி இருக்கிறார் என்றும் பேசப்பட்டு வந்தது, வெற்றிமாறன் அவர்களும் சில இன்டர்வியூவில் நான் விஜய்யிடம் கதை சொல்லி இருக்கிறேன் அது கிட்டத்தட்ட ஓகே தான் ஆனால் நேரம் அமையும் போது நாங்கள் இணைவோம் என்று அவர் உறுதியாக கூறியிருந்தார். வெற்றிமாறன் அவர்கள் விஜயின் 69 வது படத்தை ஒரு அரசியல் கருத்தும் மற்றும் சமூக விழிப்புணர்ச்சியாக படம் இயக்கு உள்ளதாக தகவல் வெளிப்படுத்தி இருந்தார்.

   


ஆனால் தற்போது வெற்றிமாறன் அவர்கள் ஒரு செய்தியாளர்கள் நேர்காணலின்போது மேடையில் வைத்து விஜய் அவர்களுக்கு கதை சொல்லி இருக்கிறேன் அதற்கு அவர் ஓகே சொல்லிட்டாரு, விஜய் சார் ரெடியா தான் இருக்காரு, கிட்டத்தட்ட எல்லாமே ரெடியா இருக்கு, கூடிய சீக்கிரம் படம் ஆரம்பிக்கப்படும் என்று வெளிப்படையாக சில விஷயங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். இதை இணையத்தில் கண்ட ரசிகர்கள் மாபெரும் கொண்டட்டத்தில் இதனை மிக மகிழ்ச்சியாக பகிர்ந்து வருகிறார்கள். விஜயின் கடைசி படமான விஜய் 69 படத்தை வெற்றிமாறன் இயக்கினால் எங்களுக்கு பெரும் கொண்டாட்டம் என்று பல ரசிகர்கள் தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில் விஜய்யும் வெற்றிமாறனும் இணைந்து காம்போவில் உருவாகும் இப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் iam waiting” மூடில் இருக்கிறார்கள்.

author avatar
Ranjith Kumar