தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார், தனது நண்பர்களுடன் தீவிரமாக கிரிக்கெட் விளையாடும் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. 90களில் திரையுலகில் அறிமுகமாகி காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, வில்லன் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து இன்றுவரை ரசிகர்களின் பேராதரவோடு மாஸ் நாயகனாக நிலைத்து நிற்கிறார். ஒட்டுமொத்த ரசிகர்களாலும் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படும் இவருடைய நடிப்பில், சமீபத்தில் வெளியான “குட் பேட் அக்லி” (Good Bad Ugly) திரைப்படம் வரை மொத்தம் 63 படங்கள் வெளியாகியுள்ளன. மேலும், இவரது 64-வது திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘AK 64’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது திரைப்படங்கள் தாண்டி கார் பந்தயங்களில் (Car Racing) தீவிர கவனம் செலுத்தி வரும் அஜித் குமார், திடீரென கிரிக்கெட் மைதானத்தில் காட்டிய சுறுசுறுப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த புதிய காணொளியில், அவர் வெறும் பொழுதுபோக்கிற்காக விளையாடாமல், ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரரைப் போல மிக நேர்த்தியாக விளையாடுவதைக் காண முடிகிறது. குறிப்பாக, விக்கெட் கீப்பிங்கில் காட்டிய அசாத்திய வேகம் மற்றும் பேட்டிங் செய்யும்போது பந்துகளை அதிரடியாக எதிர்கொண்டு அவர் அடித்த நேர்த்தியான ஷாட்டுகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என ஒரு ஆல்-ரவுண்டர் போல அஜித் காட்டிய இந்த துடிப்பான விளையாட்டு, அவரது ரசிகர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எப்போதுமே பைக் ரைடிங், கார் ரேசிங், துப்பாக்கி சுடுதல் என விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் அஜித், தற்போது கிரிக்கெட்டிலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த வீடியோவை அஜித்தின் ரசிகர்கள் ‘தல எதிலுமே மாஸ் தான்’ என்று மகுடம் சூட்டி, இணையம் முழுக்க கொண்டாடி பகிர்ந்து வருகின்றனர்.
